அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில், மயான கொள்ளை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ந் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. நேற்று மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு முகவெட்டு எடுத்து மயானத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும், காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில், பக்தர்கள் அலகு குத்தியும், எலுமிச்சை பழத்தை உடலில் குத்திக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் உடலில் குத்தப்பட்ட அலகில் சங்கிலி கட்டி தேர் இழுத்து வந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேதாஜி சாலையில் உள்ள மயானத்திற்கு சென்றனர். இதில், ஏராளமான வர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் மதியம் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் அம்மன் மயானத்திற்கு எடுத்து சென்று மயான கொள்ளை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மாரியம்மன் கரகம், சாமிக்கு அபிஷேக ஆராதனை, கூழ் வார்த்தல், அம்மன் திருக்கல்யாணம் மற்றும் நாடகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. பூங்காவனத்தம்மன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது பூசாரி எலும்பு துண்டை வாயில் கவ்வியப்படி வந்தார்.
பின்னர் மயானத்தில் ஆடு, கோழி பலியிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினர். மேலும் பேய் விரட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.