பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு: தற்கொலை செய்ய அனுமதி கோரி கலெக்டரிடம் ஆசிரியர் மனு தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஆசிரியர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, தூத்துக்குடியில் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஆசிரியர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முறைகேடு
தூத்துக்குடி கட்டாலன்குளத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இடைநிலை ஆசிரியரான இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் 2017–ம் ஆண்டு மே மாதம் நடந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடந்து உள்ளன. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய மாறுதல் தடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்து விட்டேன். என்னுடைய நியாயமான கோரிக்கை தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அனுமதி வழங்க வேண்டும்
இந்த முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களாகிய நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஆசிரியர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.