அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் தைக்கும் பணி

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் தைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

Update: 2018-02-15 21:30 GMT
பரமக்குடி

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு மார்ச் 7-ந்தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முகப்பு சீட்டுடன் கூடிய விடைத்தாள் தைக்கும் பணி பரமக்குடியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

அனைத்து பாடங்களுக்கும் 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும் வைத்து தைக்கப்படுகிறது. கணிதம் மற்றும் வரலாறு பாடத்திற்கு கிராப், மற்றும் வரைபடம் சேர்த்து தைக்கின்றனர். இதுதவிர அதிகமாக பக்கங்கள் எழுதும் மாணவர்களுக்கு தனியாக விடைத்தாள் வழங்கப்படும். அந்த விடைத்தாளோடு முகப்பு சீட்டும் இணைக்கப்படுகிறது.

அதில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு எண்,தேர்வு மைய எண், தேர்வு பாடம் உள்பட அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால் மாணவர்கள் காப்பி அடிப்பது தடுக்கப்படுகிறது.

விடைத்தாள்கள் மாற்றுவது உள்பட முறைகேடுகள் தவிர்க்கப்படுகிறது. இப்பணி தொடங்கப்பட்டு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்