நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் 130 பேர் கைது
நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
33 ஆண்டுகள் பணிபுரிந்த சத்துணவு ஊழியர்களை நிரந்தர அரசு ஊழியராக ஆக்க வேண்டும், 110–வது விதியின்கீழ் 8–வது ஊதியக்குழு பரிந்துரையில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இதையொட்டி நேற்று காலையிலேயே சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நிர்மலாபாய் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் நீலத்தங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வில்பிரட் நன்றி கூறினார்.
இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட அனைவரையும் கைது செய்தனர். 6 ஆண்கள் உள்பட மொத்தம் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.