தாய், சேய் நல விடுதிக்கு திடீர் பூட்டு கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதி
சேலம் தாதகாப்பட்டியில் தாய், சேய் நல விடுதிக்கு திடீரென பூட்டு போடப்பட்டதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக அவதிப்பட்டனர்.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டியில் உள்ள நெசவாளர் காலனியில் தாய், சேய் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தாய், சேய் நல விடுதிக்கு திடீரென பூட்டு போடப்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை அங்கு வந்த கர்ப்பிணிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர் தாதகாப்பட்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து மருந்துகளை எடுத்து வந்து அங்கு கொண்டுவரப்படும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகிறார். இதற்காக கட்டிடத்தின் வெளியே மேஜை போடப்பட்டு அதில் மருந்து, மாத்திரைகளை வைத்து சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சை பெற அவதிப்படுகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தாய், சேய் நலவிடுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தாய், சேய் நல கட்டிடத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் கட்டிடத்தின் வெளியே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெளியில் இருந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் அருகில் வளர்ந்து நிற்கும் மரத்தில் இருந்து பூச்சிகள் குழந்தைகள் மேல் விழுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த விடுதியை திறக்காவிட்டால் அடுத்த வாரம் சேலம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் தெரிவிப்போம் என்றனர்.
இதுகுறித்து மாநகர நகர்நல அலுவலர் பிரபாகரன் கூறுகையில், தாய், சேய் நலவிடுதியில் பிரசவம் பார்க்கப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த போது கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகதான் கட்டிடம் பூட்டப்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தாய்,சேய் நலவிடுதியில் வேறு எந்த கட்டிடமும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் சுகாதாரம் சம்பந்தமான அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.