மாசிமகத்தையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் துப்புரவு பணி தீவிரம்
மாசிமகத்தையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் துப்புரவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் உள்ள மணிமுக்தாற்றில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மாசிமகம் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
மேலும் அன்றைய தினம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவமும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் மணிமுக்தாற்றில் ஏராளமான மக்கள் கூடுவார்கள்.
இதையொட்டி பொதுமக்கள் நலன்கருதி மணிமுக்தாற்றை துப்புரவு செய்யும் பணியில் விருத்தாசலம் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் மணிமுக்தாற்றில் ஆங்காங்கே உள்ள முட்செடிகள் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஆகியவை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் மாசி மகத்தன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.