பகுஜன் சமாஜ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி: தலித் ஓட்டுகளை ஈர்ப்பதில் காங்கிரசுக்கு பின்னடைவு?

பகுஜன் சமாஜ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணியால் தலித் ஓட்டுகளை ஈர்ப்பதில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2018-02-14 21:45 GMT
பெங்களூரு,

பகுஜன் சமாஜ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணியால் தலித் ஓட்டுகளை ஈர்ப்பதில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

20 சதவீத வாக்கு வங்கி

கர்நாடகத்தில் பெரிய கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மட்டுமே உள்ளன. பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டுகள், தேசியவாத காங்கிரஸ் என சிறிய கட்சிகள் நிறைய உள்ளன. ஆனால் அந்த கட்சிகளுக்கு 1 சதவீத ஓட்டுகள் கூட இல்லை என்பது கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் இருந்து அறிய முடிகிறது.

கர்நாடகத்தை பொறுத்தவரையில் பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த வரலாறு இல்லை. இந்த நிலையில் தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி 20 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு வங்கி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

தலித் ஓட்டுகளை ஈர்ப்பதில்...

ஆயினும் அந்த கட்சிக்கு 20 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) ஒதுக்கியுள்ளது. ஜனதா தளம்(எஸ்) தென் கர்நாடகத்தில் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும்பாலான தொகுதிகள் வட கர்நாடகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி மிக குறைவு என்பதால், தலித் ஓட்டுகளை ஈர்ப்பதில் காங்கிரசுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்