அரசு ஆஸ்பத்திரியில் இரு தரப்பினரிடையே மோதல் நோயாளிகள் அலறிஅடித்து ஓட்டம்
ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த பாரதி (வயது 52), அவரது மகள் திவ்யபாரதி (20) ஆகியோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் திடீரென திவ்யபாரதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட தகராறில் பாரதி தரப்பினருக்கும், ராணி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பாரதியின் வீட்டை சிலர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் வீட்டின் கண்ணாடி உடைந்தது. மேலும் இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் காயம் அடைந்த பாரதி, அவரது மகள் திவ்யபாரதி, மருமகள் சுவாதி ஆகிய 3 பேரும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் ராணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சுகந்தி ஆகியோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாலையில் மோதிக்கொண்டனர். அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் சினிமா பாணியில் ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஸ்டேண்டை எடுத்துக்கொண்டு இரு தரப்பினரும் ஆவேசத்துடன் மோதிக்கொண்டனர்.
இதனால் அங்கு இருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நரியம்பட்டு கிராமத்தில் நடந்த மோதல் தகராறு குறித்து உமராபாத் போலீசாரும், அரசு ஆஸ்பத்திரியில் நடந்த தகராறு குறித்து ஆம்பூர் டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.