போலி ஆவணம் மூலம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி பெண் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-13 22:15 GMT
சென்னை,

சென்னை மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை பெரம்பூர் பெரியார் நகரில் செயல்பட்டு வந்த மருந்து கடையின் முன்னாள் ஊழியர் வெரோணிக்கா (வயது 35), மருந்து கடை உரிமத்தை தன் பெயரில் போலியாக தயாரித்துள்ளார்.

பெண் கைது

பின்னர் அந்த ஆவணத்தை சமர்ப்பித்து தனியார் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வெரோணிக்கா நேற்று கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்