நீடாமங்கலம் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி 10 பேர் காயம்

நீடாமங்கலம் அருகே மரத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-02-13 22:45 GMT
நீடாமங்கலம்,

திருச்சியில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி அரசு பஸ் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் நவநீதகிருஷ்ணன் (வயது40) ஓட்டி சென்றார். கண்டக்டராக முசிறியை சேர்ந்த செந்தில்குமார் பணியில் இருந்தார். இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி ஓடத்துறை பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான அரசு பஸ்சை கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

இதுபற்றி நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்