கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு தென்மேற்கு ரெயில்வே தகவல்
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 சிறப்பு ரெயில்களின் சேவைகளை நீட்டிப்பு செய்து தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு,

யஷ்வந்தபுரம்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்
இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்-எர்ணா குளம் இடையே தட்கல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும்(வண்டிஎண்:06547/06548), சாம்பல்பூர்-பானசவாடி இடையே சிறப்பு கட்டண அடிப்படையில் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (08301/08302) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 சிறப்பு ரெயில்களின் சேவையும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, யஷ்வந்தபுரம்-எர்ணாகுளம் தட்கல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(06547) சேவை ஏப்ரல் மாதம் 3-ந் தேதியில் இருந்து ஜூன் மாதம் 26-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில்(06547) மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக இயங்கும் எர்ணாகுளம்-யஷ்வந்தபுரம் தட்கல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(06548) சேவை ஏப்ரல் மாதம் 4-ந் தேதியில் இருந்து ஜூன் மாதம் 27-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்(06548) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.
சாம்பல்பூர்-பானசவாடி சிறப்பு ரெயில்
இதேபோல், சாம்பல்பூர்-பானசவாடி வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(08301) சேவை மார்ச் மாதம் 7-ந் தேதி முதல் மார்ச் மாதம் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வாரந்தோறும் புதன்கிழம்ை- காலை 9.30 மணிக்கு சாம்பல்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(08301) மறுநாள் மாலை 4.40 மணிக்கு பானசவாடியை வந்தடையும்.
மறுமார்க்கமாக இயங்கும் பானசவாடி-சாம்பல்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(08302) சேவை மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு பானசவாடியில் இருந்து புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(08302) சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு சாம்பல்பூரை சென்றடையும்.
மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.