நடைபயிற்சி சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை 5 பேர் கைது

நடைபயிற்சி சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மைனர் வாலிபர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2018-02-12 23:45 GMT
மும்பை,

மும்பை மெரின்டிரைவ் பகுதியில் சம்பவத்தன்று அதிகாலை பெண்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். மேலும் அவர்களது செல்போன் எண்ணையும் கேட்டு தொந்தரவு செய்தனர்.

இதை அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஷித் ஷிரோப் என்பவர் கவனித்து அந்த வாலிபர்களை கண்டித்து உள்ளார். இதனால் பயந்து போன அவர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆஷித் ஷிரோப் மெரின்டிரைவ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது செம்பூரை சேர்ந்த பிரேம்(வயது21), ஜக்மோகன்(21), விகாஷ்(21) மற்றும் 2 மைனர் வாலிபர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மைனர் வாலிபர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்