ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று காலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஆழ்வாரப்பன், ராமச்சந்திரன், முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள்.
ஓய்வுபெற்ற ஊழியர்களை தரம் பிரிக்காமல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை ஓய்வூதியர்களுக்கும் ஊதியக்குழு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாதகால ஓய்வூதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதை போல மருத்துவப்படியாக மாதத்திற்கு ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரிச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தமிழக அரசு மதிப்பு அளித்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.