திண்டுக்கல் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட 11 வகையான வரிகளை குறைக்கக்கோரி கமிஷனரிடம், வணிகர்கள் மனு
திண்டுக்கல் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட 11 வகையான வரிகளை குறைக்கக்கோரி, கமிஷனரிடம் வணிகர்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், பொருளாளர் முகமதுகனி, திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, செயலாளர் மேடாபாலன், துணைத்தலைவர் ஜி.சுந்தரராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி கமிஷனர் மனோகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி, வருமானவரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை அனைத்து வணிகர்களும் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளான மேயர், கவுன்சிலர்கள் பதவியில் இல்லாத நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களை பாதிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. தொழில்வரி, தொழில் உரிம கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி, சேவை வரி, உரிமம், பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட 11 வகையான வரிகள் 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வணிகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, உயர்த்தப்பட்ட கூடுதல் வரி விகிதத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன், கமிஷனர் மனோகர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வரி உயர்வு தொடர்பாக வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கமிஷனர் தெரிவித்தார். அதன்பேரில் வணிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.