பஸ் கட்டண உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாகை கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். இதில் 10 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஏ.வி.முருகையன், நாகராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நாகை நகர செயலாளர் பெரியசாமி, நாகை ஒன்றிய செயலாளர் பகு, கட்சியை சேர்ந்த சுபாஸ்சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும். பஸ் கட்டண உயர்வை கண்டித்து நியாயமாக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். போக்குவரத்து கழகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அரசே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது அங்கு நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.