‘மோடியை பற்றி பேச, ராகுல்காந்திக்கு தகுதி இல்லை’ தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
மோடியை பற்றி பேச, ராகுல்காந்திக்கு தகுதி இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரை,
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி மிகப்பெரிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். தீ விபத்து நடந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். தொடர்ந்து இந்து கோவில்களில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
ஆன்மிக அரசியலை முன்னெடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ஆனால் ஆன்மிக அரசியலுக்கு முதல் முதலில் வித்திட்டது பா.ஜ.க. தான். தமிழகத்திலும் பா.ஜ.க. ஆன்மிக அரசியலை நடத்தி வருகிறது. காவி அரசியலும், ஆன்மிக அரசியலும் ஒன்றுதான். தேசிய கொடியில் காவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்திலும் காவி முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். மத்திய நிதி அமைச்சராக அவர் இருந்தபோது மக்களுக்கான ஒரு நல்ல திட்டத்தை கூட கொடுக்கவில்லை. மோடியின் அரசை பற்றி குறை சொல்ல ப.சிதம்பரத்திற்கு உரிமை இல்லை. அதுபோல் பட்ஜெட் பற்றி ராகுல்காந்தி குறை சொல்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேர்ச்சி பெறட்டும். அதன் பின்பு மோடியை குறை சொல்லலாம். அவரது கட்சியிலேயே அவர் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார். அவருக்கும், மோடியை பற்றி குறை சொல்ல தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கடன் வாங்குவதற்காக மட்டுமே பிரதமர்கள் வெளிநாடு சென்றனர். ஆனால் மோடியின் ஆட்சியில், மற்ற நாடுகளுக்கு கடன் கொடுப்பதற்காக பிரதமர் வெளிநாடு செல்கிற நிலைமை உருவாகி உள்ளது. மோடி மக்களுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.29 கோடி செலவில் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரெயில் பாதை அறிவிக்கப்பட்டு அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.
தூய்மை நகரம் என்ற திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மதுரைக்கு ரூ.555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் அதிகப்படியான நகரங்களை, ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல் மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான மருத்துவத்தை ஏழை மக்கள் பெற முடியும். இதுபோன்ற மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வேலை இல்லா திண்டாட்டம் இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் வேலை இல்லா திட்டாட்டம் குறைந்துள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.