சட்டசபையில் ஜெயலலிதா படம்; மக்களை ஏமாற்றும் வேலை தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு
சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று தங்கதமிழ் செல்வன் கூறினார்.
மேலூர்,
மேலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது:- சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்தது மக்களை ஏமாற்றும் வேலை. ஜெயலலிதா படத்தை திறந்தது 100 சதவீதம் மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் இவ்வளவு அவசரமாக ஏன் பேரவை தலைவரை வைத்து திறக்க வேண்டும் என்பது வருத்தமளிக்கிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு வழக்கில் தீர்ப்பு நல்லபடியாக அமையும். அரசியல் மாற்றங்கள், சரித்திரம் மாறும் கர்நாடக நீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என தண்டனை வழங்கியது. பின்னர் நிரபராதி என கூறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஜெயலலிதா தான் என்று கூறுவது சாலச்சிறந்தது.
திறமையான ஆட்சி நடத்துகிறோம் என கூறும் எடப்பாடி அரசு, பிரதமர், ஜனாதிபதி, அல்லது கவர்னரை அழைக்காமல், பேரவை தலைவரை வைத்து ஜெயலலிதா படம் திறப்பது ஏன். இது மக்களை ஏமாற்றுவதற்காக இந்த அரசு செய்யும் வேலை. அமைச்சர் செங்கோட்டையன் நீண்ட நாட்களுக்கு பிறகு வாயை திறந்து வம்பில் சிக்கி கொண்டார். இவ்வாறு அவர் கூறினர்.