என்ஜின் பழுதானதால் படகு நின்றது: நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
கடலூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் படகு என்ஜின் பழுதாகி நின்றதால் 4 மீனவர்கள் தத்தளித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பிரபு (வயது 28). மீனவர். இவரும், அதே ஊரை சேர்ந்த மீனவர்களான விஸ்வநாதன் மகன் சக்திவேல் (36), குட்டியாண்டி மகன் சுப்பிரமணியன் (31), நாகராஜன் மகன் தென்னவன் (49) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பைபர் படகில் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் ஆழ்கடலில் மீன்பிடித்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென படகு என்ஜின் பழுதாகி நின்றது. உடன் அவர்கள் செல்போன் மூலம் கடலோர காவல் படையை தொடர்பு கொண்டனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் உடனடியாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.
இதனால் அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் விடிய, விடிய தத்தளித்தனர். பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் செல்போனுக்கு சிக்னல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கடலூர் கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர்.
அதன்படி கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு படகில் விரைந்து சென்று, நடுக்கடலில் தத்தளித்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டு துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் படகையும் கயிறு மூலம் கடலோர காவல் படையினர் சென்ற படகில் கட்டி துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.