மாவட்டத்தில், 138 மையங்களில் குரூப்-4 தேர்வை 36 ஆயிரத்து 651 பேர் எழுதினார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 138 மையங்களில் குரூப்-4 தேர்வை 36 ஆயிரத்து 651 பேர் எழுதினார்கள். 6 ஆயிரத்து 987 பேர் தேர்வு எழுதவில்லை.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் இந்த குரூப்-4 தேர்வு நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் 50 தேர்வு மையங்களிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 6 மையங்களிலும், ஓசூர் தாலுகாவில் 34 மையங்களிலும், போச்சம்பள்ளி தாலுகாவில் 18 மையங்களிலும், ஊத்தங்கரை தாலுகாவில் 20 மையங்களிலும், பர்கூர் தாலுகாவில் 7 மையங்களிலும், சூளகிரி தாலுகாவில் 3 மையங்களிலும் என மொத்தம் 138 மையங்களில் 43 ஆயிரத்து 638 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்து செல்ல பஸ் வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளில் தனியார் கல்லூரிகள் மூலமாக சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
6,987 பேர் எழுதவில்லை
தேர்வினை கண்காணிக்க 29 சிறப்பு பறக்கும்படை மற்றும் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்த 43 ஆயிரத்து 638 பேரில் 36 ஆயிரத்து 651 பேர் தேர்வு எழுதினார்கள்.
கிருஷ்ணகிரி தாலுகாவில் 2 ஆயிரத்து 481 பேரும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 271 பேரும், ஓசூர் தாலுகாவில் 2 ஆயிரத்து 443 பேரும், போச்சம்பள்ளி தாலுகாவில் 634 பேரும், ஊத்தங்கரை தாலுகாவில் 784 பேரும், பர்கூர் தாலுகாவில் 264 பேரும், சூளகிரி தாலுகாவில் 110 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 987 பேர் தேர்வு எழுத வரவில்லை.