புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பினை உருவாக்கும் பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதற்காக இரும்புத் தகடு பதிக்க நவீன எந்திரம் மூலம் தூர்வாரப் படுகிறது.
புதுச்சேரி,
மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் ரூ.24 கோடி செலவில் புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்படுகிறது. இதற்காக தலைமை செயலகம் அருகே கடலில் தூண்டில் முள்வளைவு போன்று கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்து அங்கு மணல் கொட்டப்பட்டு செயற்கை மணல்பரப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்படாத நிலையில் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், புதுவை மக்களும் அந்த மணல் பரப்பில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும் கடல்சீற்றம் காரணமாக அந்த செயற்கை மணல் பரப்பு காணாமல் போனது. தற்போது செயற்கை மணல் பரப்பினை மீண்டும் உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தற்போது கருங்கற்கள் கொட்டப்பட்ட பகுதியில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க கூம்பு வடிவில் இரும்புத் தகடு பதிக்கப்பட உள்ளது. இதற்காக 900 டன் எடையில் இரும்புத் தகடு கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடல் அலையில் மண் அரித்துச் செல்லாமல் இருக்க சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு இந்த இரும்புத் தகடுகள் பதிக்கப்பட உள்ளன.
இதையொட்டி கடலுக்குள் நவீன எந்திரம் மூலம் (டிரெஜ்ஜிங் பம்ப்) கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதி அருகிலேயே மணல் தூர்வாரும் பணி நடக்கிறது. சுமார் 5 மீட்டர் ஆழம் வரை இந்த மணல் தூர்வாரப்படுகிறது. இந்த மணல் தலைமை செயலகம் அருகிலேயே கொட்டப்பட்டு வருகிறது. இந்த தூர்வாரும் பணி சுமார் 45 நாட்கள் நடைபெற உள்ளது.
தூர்வாரப்பட்ட இடத்தில் இரும்புத் தகடு கடலுக்குள் இறக்கப்பட்டு அதை சுற்றிலும் கருங்கற்கள், சிமெண்டு கட்டைகள் கொட்டப்பட்டு நிலை நிறுத்தப்பட உள்ளது. அவ்வாறு இரும்புத் தகடு பதிக்கப்படுவதால் அங்கு சேரும் மணல் அடித்துச் செல்லாமல் இருக்க வழி ஏற்படும். வருகிற மே மாதம் அங்கு மீண்டும் மணல் பரப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணிகளை தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப கழக இயக்குனர் ரமணமூர்த்தி, விஞ்ஞானி முல்லைவேந்தன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.