தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி குறைந்தது; வேளாண் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு டாக்டர் ராமதாஸ் பேட்டி
தமிழ்நாட்டில் நீர்ப்பாசன திட்டங்கள் தோல்வி அடைந்ததால் வேளாண் உற்பத்தி குறைந்து உள்ளது என்று வேளாண் நிழல் பட்ஜெட்டை தாக்கல் செய்து டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கோவை,
விவசாயத்துறை வளர்ச்சிக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டு வரு கிறது. இந்த கட்சியின் சார்பில் 11-வது வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிடும் நிகழ்ச்சி கோவை ஜென்னி ரெசிடென்சியில் நேற்று மாலை நடைபெற்றது. நிழல்பட்ஜெட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிழல் பட்ஜெட்டில் வேளாண் வளர்ச்சிக்கான 226 முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை வெளியிட்டு டாக்டர் ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:-
விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் டை தாக்கல் செய்கிறார்கள். இந்தியாவில் வேளாண் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 சதவீதமாக இருந்தது. தற்போது இந்தியாவில் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘மைனஸ்’ 3.5 சதவீதமாக ஏற்கனவே குறைந்து, தற்போது ‘மைனஸ்’ 8 சதவீதமாக விவசாய வளர்ச்சி குறைந்துள்ளது. தற்போதைய தமிழக அரசு விவசாயத்துறை தொடர்பான பொய்யான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடுகிறது. இந்த அரசு வேளாண்துறை வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தமிழ்நாட்டில் நீர்ப்பாசன திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளது. பாசன பரப்பு அதிகரிக்கப்பட வில்லை. மற்ற மாநிலங்களில் நீர்ப்பாசன பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் நீர்ப்பாசன திட்ட தோல்வியாலும், முறையாக செயல்படுத்தப்படாததாலும் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. எங்களது வேளாண் நிழல் பட்ஜெட்டை மாநில அரசிட மும் வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
* நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இப்போதுள்ள 26.79 லட்சம் ஹெக்டேரில் இருந்து 50 லட்சம் ஹெக்டேராக பாசன பரப்பு அதிகரிக்கப்படும்.
* திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.3,523 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* பாலாறு பாசன திட்டம், தாமிரபரணி நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணை- துரிஞ்சலாறு இணைப்பு, கொள்ளிடத்தில் தடுப்பணை, காவிரியில் தடுப்பணை, கடலில் கலந்து வீணாகும் 56 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க சிறப்பு திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
* வேளாண்மை துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம். விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பாதை அமைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி பாசன மாவட் டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
* வேளாண்மை துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படும். 8 மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் 4 வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
* சீமை கருவேல மரங்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும். பனைமரம் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டுவரப்படுவதுடன், நீராபானம் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் வேளாண்மைமுறை சார்ந்த பணிகளை கவனிக்க வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண்மை சந்தை துறை, நீர்வள மேலாண்மை என மொத்தம் 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்.
இவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட்டை வெளியிட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறக்க கூடாது. மீறி திறந்தால் அது நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பெரிய தலைகுனிவாகும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.