சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கோவை,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்து வருகிறது. இன்றைய சூழலில் காவிரியில் மேட்டூர் அணையில் தண்ணீர் கிடையாது. கர்நாடகத்தில் காவிரியில் போதுமான தண்ணீர் இருக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். எனவே கர்நாடக அரசு, தஞ்சையில் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கோவையில் உள்ள பாரதியார்பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி சமீபத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் அனைத்து பல்கலைகழகங்களிலும் ஊழல் நடைபெறுகிறது. துணைவேந்தர் பதவிக்கு ரூ.10 கோடி முதல் ரூ.35 கோடி வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இது பர்னாலா, ரோசையா ஆகியோர் காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லஞ்சம் கொடுத்து பதவியை பெற்ற துணைவேந்தர்கள் பணத்தை எப்படி வசூலிக்கலாம் என்ற நோக் கத்தில் பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வாங்குகின்றனர். பார தியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ரூ.600 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த ஊழலில் அமைச்சர்களும் உடந்தையாக உள்ளனர. கடந்த 15 ஆண்டுகளாக நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை இல்லாத அரசாக உள்ளது.
எனவே பெரும்பான்மையை நிரூபித்த பிறகு தான் தமிழக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண் டும். தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது. எனவே அவரது உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம். மத்திய அரசின் பட்ஜெட் தேர்தல் பட்ஜெட். இதில் எதுவும் நடைமுறைக்கு வரப்போவது இல்லை. மருத்துவ காப்பீட்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும் எங்கே அமைப் பது என்பதில் அரசியல் காரணங்ளுக்காக மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.