மாவட்டம் முழுவதும் குரூப்–4 தேர்வை 47,212 பேர் எழுதினர் 8,311 பேர் வரவில்லை
தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வை குமரி மாவட்டம் முழுவதும் 47,212 பேர் எழுதினர். 8,311 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என 8 வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நேற்று நடந்தது.
குமரி மாவட்டத்தில் குரூப்–4 தேர்வு எழுதுவதற்காக 55 ஆயிரத்து 523 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் 104 பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 174 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாவட்டம் முழுவதும் குரூப்–4 தேர்வை 47 ஆயிரத்து 212 பேர் எழுதினார்கள். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 8 ஆயிரத்து 311 பேர் வரவில்லை.
தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 19 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தன. 22 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்காக 111 வீடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் இடங்கள் பதற்றம் நிறைந்த மையங்களாக தேர்வு செய்யப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசுப்பள்ளி, கார்மல் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதே போல் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோவும் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.