பறிக்கலாம்.. சுவைக்கலாம்..
மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இயற்கையின் அழகை ரசிப்பதோடு, இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தானியங்களால் தயார் செய்யப்படும் உணவுகளையும் ருசித்து மகிழும் வகையில் அமைந்திருக்கிறது, டியோ ரெசார்ட்.

இது உத்தரகாண்ட் மாநிலம் முக்டேஸ்வர் பகுதியில் இமயமலை அடிவாரத்தில் ரம்மியமான இயற்கை சூழலில் காட்சி தருகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இரு சகோதரிகளின் கூட்டு முயற்சியில் இந்த ரெசார்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய பெயர் கனிகா-குஷிகா சர்மா. இருவரும் முதுகலைப்பட்டதாரிகள். படிப்பை முடித்ததும் பல்வேறு இடங்களில் வேலை பார்த்திருக்கிறார்கள். விடுமுறை தினங்களில் ஊர் திரும்பும்போது, விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருந்தவர்கள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்வதை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார்கள். சுற்றுலா தலமாக விளங்கும் நானிடால் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இருக்கிறது. ஆதலால் தங்கள் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் மூலமே விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுடைய தந்தைக்கு ஓட்டல் நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. விவசாயிகளின் துணை கொண்டு ஓட்டலை நிர்வகிக்கும் நோக்கத்தில் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரெசார்ட்டுக்காக ஐந்து அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி இடங்களையெல்லாம் இயற்கை விவசாயம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. உள்ளூர் விவசாயிகள் ஒத்துழைப்புடன் இரு சகோதரிகளும் இயற்கை விவசாய சாகுபடியை ஊக்குவித்து வருகிறார்கள்.
‘‘நாங்கள் படிப்பை முடித்ததும் மெட்ரோ நகரங்களில் வேலை பார்த்தோம். ஆனால் அந்த வேலைகள் மன நிறைவை தரவில்லை. இங்குள்ள விவசாயிகள் எங்களைபோல் நகர் பகுதிகளுக்கு இடம்பெயர்வதை பார்த்தபோது அவர்களுடன் இணைந்து உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டோம். எங்கள் தந்தையின் விருப்பத்தின் பேரில் ரெசார்ட் தொடங்க தீர்மானித்தோம். அங்கு இயற்கை விவசாயம் செய்து அங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டே ரெசார்ட்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு சமைக்க தீர்மானித்தோம். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல பகுதி களுக்கு சென்று வேளாண் நுணுக்கங்களை கற்றறிந்தோம். எனினும் ஆரம்பத்தில் உள்ளூர் விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடு படுத்துவது சவாலானதாக இருந்தது. இயற்கை விவசாய பொருட்களுக்கும், ரசாயன முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒரே சந்தை விலைதான் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் இழப்பை சந்தித்தார்கள்’’ என்கிறார் குஷிகா.
இரு சகோதரிகளும் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவே நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் 200 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தங்கள் பகுதியை இயற்கை விவசாய விளைபொருட்களின் விற்பனை மையமாக மாற்றிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இயற்கை விவசாயத்துடன் இணைந்திருக்கும் இவர்களுடைய ரெசார்ட்டுக்கும் மவுசு கூடிவருகிறது. அங்கு வருபவர்கள் இயற்கை விவசாய பணிகளை ஆர்வமாக பார்வையிடு கிறார்கள். அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை தேர்வு செய்து அவைகளை சமைக்க சொல்லி ருசிக்கிறார்கள். காய்கறி விளைவிக்கப்படும் பகுதிகளில் சில மணி நேரங்களை செலவு செய்து விவசாயம் சார்ந்த தகவல்களையும் ஆர்வமாக கேட்டறிகிறார்கள்.
இந்த ரெசார்ட் மலைவாசஸ்தல பகுதியில் அமைந்திருப்பதால் மழை நீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ‘‘ஒருதுளி மழைநீரைக்கூட வீணாக்கக்கூடாது. மழைநீர் சேமிப்பு மூலமே நாங்கள் வருடத்திற்கு நான்கு லட்சம் லிட்டர் நீரை சேமிக்கிறோம். இவ்வளவு பெரிய இடத்தில் எதற்காக 5 அறைகளை மட்டுமே கட்டியிருக்கிறீர்கள் என்று நிறைய பேர் கேட்கிறார்கள். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனால் எங்கள் கவனத்தையெல்லாம் விவசாயத்தின் மீதே செலுத்துகிறோம்’’ என்கிறார் குஷிகா.
இயற்கை சூழலிலேயே ரெசார்ட் இயங்கும் விதமாக மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சோலார் பேனல்களையும் நிறுவி இருக் கிறார்கள்.