காளான் கொழுப்பைக் கரைக்கும்

கடல் உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடாமலேயே உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை பெற்று விடலாம்.

Update: 2018-02-11 06:42 GMT
டல் உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடாமலேயே உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை பெற்று விடலாம். அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

இறைச்சி வகைகளைவிட பீன்ஸ்சில் அதிக அளவு புரதம் உள்ளது. அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் போதுமான அளவு புரச்சத்தை பெறமுடியும். பருப்பு வகைகளையும் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையும் சீரான புரத சத்துக்களை வழங்கும்.

சோயா பீன்ஸ்சிலும் அதிக புரதச் சத்து இருக்கிறது. புரதச்சத்து குறைபாடு கொண்டவர்கள் உணவில் சோயாபீன்சை சேர்த்துக்கொள்வது அவசியம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றையும் சாப்பிடவேண்டும்.

முளைகட்டிய தானியங்களும் புரதச்சத்து நிரம்பப்பெற்றவை. அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் பச்சைப்பயறு, கடலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் முளைக்குருத்து வரும் தருவாயில் சாப்பிடவேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இவைகளை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

பட்டாணியில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதனை காய்கறிகளுடன் சமைத்தோ, சூப்பாக தயார் செய்தோ ருசிக்கலாம்.

தயிர், பாலாடைக்கட்டி போன்றவை களிலும் புரதச்சத்து இருக்கிறது. அவை கொழுப்புச் சத்துக்களும் அதிகம் கொண்டவை என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.

சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். அதில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் கலந்திருக்கிறது.

தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றில் புரதச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் நிறைந்திருக்கிறது.

பெண்கள் அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக்கொள்வது அவசியம். புரதச்சத்து மிகுந்துள்ள உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை கொண்டது.

நிலக்கடலை எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. அதில் உடலுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் உள்ளன.

தினமும் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலும் கடினமான உடலுழைப்பு மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் முட்டை சாப்பிட வேண்டும்.

காளானை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவும். புரதம் உள்பட அதில் வேறு பல சத்துக்களும் உள்ளன.

மேலும் செய்திகள்