உஷாரய்யா உஷாரு..
அவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். படித்தவள். பண்பானவள். அவளது கணவர் சுயதொழில் செய்து கொண்டிருக்கிறார்.
அவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். படித்தவள். பண்பானவள். அவளது கணவர் சுயதொழில் செய்து கொண்டிருக்கிறார். அவர்களது ஒரே மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். தனிவீட்டில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவளது கணவரின் தங்கை பக்கத்து தெருவில் குடியிருக்கிறாள். அவள் அவ்வப்போது தனது அண்ணியை தேடி வருவாள். இருவரும் சேர்ந்தே கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வார்கள். தோழிகள் போன்றுதான் இருவரும் பழகிக்கொண்டிருந்தார்கள்.
சுயதொழில் செய்து வரும் கணவருக்கு நண்பர்கள் நிறைய உண்டு. நண்பர்களிடம் அவர் அவ்வப்போது பணம் கொடுக்கல்- வாங்கல் வைத்துக் கொள்வார். அவரது தொழில் நிறுவனம் உள்ளூரிலே இருந்ததால் தினமும் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து போவார். மகனை பள்ளியில் இருந்து மாலை நேரத்தில் அழைத்துவந்து வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது தொழில் நிறுவனத்திற்கு செல்வார். அதனால் பெரும்பாலான நேரம் கணவரும் வீட்டில் இருப்பதுபோல்தான் தோன்றும்.
அன்று திடீரென்று கணவரின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவள் மட்டுமே இருந்தாள். அது மதிய நேரம். அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள். அந்த நபரை, தனது கணவரோடு பார்த்த ஞாபகம் இருந்ததால், கதவை திறந்தாள். முகம் கொடுத்து பேசி, ‘அவர் வீட்டில் இல்லை. தொழிற்சாலையில் இருக்கிறார்’ என்றாள்.
உடனே அந்த நபர், ‘முக்கியமான விஷயம் பேசுவதற்காக வந்திருக்கிறேன். வழக்கமாக அவன் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்குதானே வருவான். அவன் வரும் நேரமாகிவிட்டது. அதனால் நான் சிறிது நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு செல்கிறேன்’ என்றான். அவளால், அவரிடம் மறுத்துப்பேச முடியவில்லை. அதற்குள் அந்த நபர், வீட்டின் உள்ளே நுழைந்து, இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டார்.
அவருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, அவள் சமையல் வேலையில் ஈடுபட்டாள். சிறிது நேரத்தில் உள்ளுணர்வு எச்சரித்ததால், அவள் திடீரென்று திரும்பிப் பார்க்க, அந்த நபர் அப்போது அவளை பின்புறமாக நின்று கட்டிப்பிடிக்க தயாராகிக்கொண்டிருந்தான். அவள் கூச்சல்போட வாயை திறந்த அந்த நேரத்தில், ‘அண்ணி’ என்று அழைத்தபடி நாத்தனார் வரவும், அவள் அமைதியாகிவிட்டாள். அவன் உடனே திரும்பி வர முயற்சிக்க, அந்த காட்சி நாத்தனார் மூளையில் அப்படியே பதிந்துவிட்டது. அதற்குள் அந்த நபர் விறுவிறுவென்று நடந்து வீட்டை விட்டு வெளியேறி, கண் இமைக்கும் நேரத்தில் கடந்துபோய்விட்டான்.
அவள் சுதாரித்துக்கொண்டு நத்தனாரிடம் நடந்ததை விளக்கி, ‘நீ வந்ததால்தான் நான் தப்பித்தேன். என்னை அவன் பலாத்காரம் செய்ய முயற்சித்தான். நீ வந்திருக்காவிட்டால், நான் அவனோடு போராடியிருப்பேன். அப்போது அந்த பாவி என்னை கொலைகூட செய்திருப்பான்’ என்று அவள் வியர்க்க விறுவிறுக்க உண்மையை சொல்ல, நாத்தனாரோ ‘உங்களுக்குள் எத்தனை நாள் பழக்கம்? என் அண்ணன் இல்லாத நேரத்தில் அவன் அடிக்கடி வந்து செல்வான் என்று தெரிகிறது. நீங்கள் எவ்வளவு மோசமான பெண் என்பது இப்போதுதான் புரிகிறது’ என்றபடி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறினாள். பின்பு அண்ணனை தனது வீட்டுக்கு அழைத்து, அண்ணியையும், அந்த நபரையும் இணைத்து தப்புத்தப்பாக சொல்லிவிட்டாள்.
வந்து போன அந்த கயவனின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. அவன் யார் என்று சொல்ல அவளிடம் எந்த அடையாளமும் இல்லை. அவனை விரட்டிப்பிடிக்கவும் முயற்சித்திருக்கவில்லை. அதனால் அவள் தன்னை நியாயப்படுத்த வழியின்றி தவிக்கிறாள்.
அமைதியும், ஆனந்தமுமாக சென்று கொண்டிருந்த அவர்களது குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் மையம்கொண்டுள்ளது..
- உஷாரு வரும்.