சேர்த்து வைக்க வலியுறுத்தி கணவர் வீடு முன் இளம்பெண் தர்ணா
புதுவையில் கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கணவர் வீடு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா தழுதாளி பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 31). எல்.ஐ.சி. ஏஜெண்டான இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த சுந்தரி(28) என்பவரை திருமணம் செய்தார். இதன்பின் புதுவை மாநிலம் கொட்டுப்பாளையம் நாகாத்தமன் கோவில் வீதியில் புதுமண தம்பதிகளாக அவர்கள் குடியேறினர்.
இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை ராமஜெயம் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது சுந்தரியை அவரது தாயாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற ராமஜெயம் அங்கேயே அவரை விட்டு விட்டு வந்தார். சில நாட்களாகியும் அவர் வராததால் கணவரை தேடி சுந்தரி புதுவை வந்தார். அங்கு அவர்கள் குடியிருந்த வீடு பூட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் விசாரித்து ராமஜெயம், அவரது மனைவி சுந்தரி ஆகியோரை அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். இதன்பிறகும் மனைவியுடன் சேர்ந்த வாழ மறுத்து ராமஜெயம் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்து அவர்களது முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொட்டுப்பாளையத்தில் இருந்த ராமஜெயத்தின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி உறவினர்களுடன் ராமஜெயத்தின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.
இது பற்றிய தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் அங்கு சென்று சமாதானம் பேசினர். ஆனால் தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று மாலையில் தனது போராட்டத்தினை கைவிட்ட சுந்தரி இது தொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.