வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ஆய்வு செய்ய வந்த தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
தென்னக ரெயில்வே பொது மேலாளர் குலேஷ் ரேஷ்தா நேற்று ரெயில்வே அதிகாரிகளுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தார். இங்கு ரூ.1 கோடியே 42 லட்சத்து 82ஆயிரத்து 467 ரூபாய் மதிப்பீட்டில் 3 நடைமேடைகள் நீட்டிப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரனும் ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் செல்லும் சென்னை - ஷீரடி ரெயில், சனிக்கிழமைதோறும் செல்லும் ஷீரடி- சென்னை ரெயில், பெங்களூர்- சென்னை டபுள்டெக்கர் ரெயில், சென்னை - கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை -பழனி இடையே செல்லும் ரெயில்கள் ஆகியவை வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவு டிக்கெட் செய்யும் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும், திண்டிவனம்- நகரி ரெயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆர்.காந்தி.எம்.எல்.ஏ சார்பில் தொழிலதிபர் ரமேஷ் பிரசாத் ரெயில்வே பொது மேலாளரிடம் வழங்கினார்.
அதே போல் வாலாஜா ரோடு ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் அதன் கவுரவ செயலாளர் உமாபதி தலைமையிலான நிர்வாகிகள், பெங்களூர் - பாட்னா சங்கமித்ரா ரெயில், ஆலப்புழா- டாட்டா நகர் ஜன்பத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்கள் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
வாலாஜா ரோடு ரெயில் நிலையம் வழியாக செல்லும் டேராடூன் எக்ஸ்பிரஸ், ஹூப்ளி எக்ஸ்பிரஸ், பாடலிபுத்திரா எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் நின்று செல்லவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும் மருதாலம் கிராமத்தை சுற்றி 30-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளதால் இப்பகுதி மக்களின் நலனுக்காக மீண்டும் மருதாலம் ரெயில் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலங்கை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்பன் மற்றும் ரமணி ஆகியோர் பொது மேலாளரிடம் மனுக்கள் வழங்கினர்.
அப்போது வாலாஜா ரோடு ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.