வட்டார வளமையங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வட்டார வளமையங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.
திருச்சி,
தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
350 ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பணி மாறுதல் மற்றும் பொது கலந்தாய்வு செய்திட வேண்டும். பஸ் கட்டண உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் உயர்வை கருத்தில் கொண்டு பயணப்படியை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பிறதுறைகளை சேர்ந்த பணிகள் வழங்கி பணிச்சுமையை அதிகரிப்பதை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
அனைத்து வட்டார வளமையங்களிலும் பயிற்சியை சிறப்பாக வழங்கிடும் பொருட்டு சிறப்பு வசதிகள் மற்றும் கணினி வசதி கொண்ட பயிற்சி வளாகம் அமைத்திட வேண்டும். மாவட்டம் வாரியாக காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். இந்த மாதத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தந்த வட்டார வளமையங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் மகேசு வரவேற்றார். முடிவில் கலைச்செல்வி நன்றி கூறினார்.