பெண் பலி எதிரொலி: பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் தனி வார்டு
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் அனிதா கூறினார்.
திருச்சி,
திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி. இவருடைய மனைவி உமையவள்ளி (வயது 53). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு உமையவள்ளியின் ரத்தத்தை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உமையவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கருமண்டபம் பகுதியில் மேலும் சிலருக்கு பன்றி காய்ச்சல் பரவியுள்ளதா? என்பதனை ஆய்வு நடத்தி, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை “டீன்” டாக்டர் அனிதா கூறுகையில், “தற்போது உள்ள பருவநிலையால் பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பன்றி காய்ச்சலுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்கு 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.