மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அரும்பராம்பட்டு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு வரும் மதுபிரியர்கள் குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை நடுரோட்டிலேயே உடைத்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போதையில் அலங்கோலமான நிலையில் சாலையோரம் படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் கடையை திறப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் அரும்பராம்பட்டு கிராமத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க வருபவர்கள் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுகின்றனர். இவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் செய்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மேலும் மாணவிகள் இவ்வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தற்காலிகமாக இந்த கடை செயல்படாது என்று கூறினர்.
இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊழியர்கள், டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.