விழுப்புரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது
விழுப்புரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே தொந்தி ரெட்டிப்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் 204 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ராஜாங்கம் மகன் அசோக்குமார் (வயது 34), பெருமாள் மகன் பிரபு (22) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அசோக்குமார், பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.