சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மறியல்
கருங்கலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருங்கல்,
கருங்கல்–மார்த்தாண்டம் சாலையில் கருங்கல் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் இருந்து முள்ளங்கினாவிளை வரையுள்ள பகுதி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை மனுக்கள் மூலமாகவும், நேரடியாகவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை 9 மணி முதல் காங்கிரஸ் தொண்டர்கள் கருங்கல் பகுதியில் குவிய தொடங்கினர். இதையடுத்து கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 10 மணியளவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், மாநில செயற்குழு உறுப்பினர் சில்வெஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
போராட்டக்காரர்களிடம் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் தோல்வியில் முடிந்தது.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை குழித்துறை உதவி கோட்ட பொறியாளர் சித்ரா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சேதமடைந்த சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.