மறுவாழ்வு பெற்றுவரும் ‘மர மனிதர்’!

உடல் முழுவதும் மரம் போன்ற மருக்கள் ஏற்பட்டதால் அவதிக்குள்ளான வங்கதேச நபர், மெல்ல மெல்ல மறுவாழ்வு பெற்று வருகிறார்.

Update: 2018-02-10 10:24 GMT
ரு குழந்தைக்குத் தந்தையான 27 வயது நபர் அப்துல் பஜந்தரே ‘மர மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது கால்கள் மற்றும் கைகளில் பட்டை போன்ற மருக்கள் தோன்றி இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

பலவித சிகிச்சைகளிலும் பலனில்லாத நிலையில், கடந்த ஆண்டு சிறப்பு மருத்துவக் குழு ஒன்று இவரது மருக்களை 16 அறுவைசிகிச்சை மூலம் நீக்கியது.

அவரது கை, கால்களில் இருந்து சுமார் 5 கிலோ வரை மருக்களை நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

மருக்கள் நீக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார் அப்துல். தமது இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதாகவும், இனிமேல் தன்னால் தனது குழந்தையை ஆசை தீர தூக்கிக் கொஞ்ச முடியும் எனவும் அவர் நிம்மதி தெரிவித்தார்.

அப்துல் பஜந்தர் போன்ற இந்த நிலை உலகில் நான்கு பேருக்கு மட்டுமே இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல், தனது கை, கால்களில் பட்டை பட்டையாக மருக்கள் வளர்ந்தபின்னர் சர்வதேச அளவில் அறியப்பட்டார்.

கடந்த ஆண்டு அப்துலுக்கு நடத்தப்பட்ட 16 அறுவைசிகிச்சைகளுக்குப் பின்னர், இந்த நோயில் இருந்து குணமடையும் முதல் நபர் இவரே எனவும், இனி அந்த நோய் இவரைத் தாக்காது எனவும் மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் தற்போது தமது கைகளில் மீண்டும் அந்த மருக்கள் வளரத் துவங்கியுள்ளதாக புகைப்படங்களை அப்துல் பஜந்தர் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அவர் மருத்துவர்களை நாடி அறுவைசிகிச்சை செய்துகொள்வார் எனத் தெரிகிறது. 

மேலும் செய்திகள்