வடலூரில் வேகத்தடை அமைக்கக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியல்
வடலூரில் வேகத்தடை அமைக்கக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடலூர்,
வடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் காட்டுக்கொல்லையில் மஸ்ஜிதே நூர் ஜூம்ஆ பள்ளி வாசல் அருகே மற்றும் புதுநகர் செல்லும் குறுக்கு சாலையில் வேகத்தடைகள் இருந்தது. மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் காட்டுக்கொல்லை பள்ளி வாசல், புதுநகர் செல்லும் குறுக்குசாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த 2 இடத்திலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முஸ்லிம்கள் தொழுகைக்காக காட்டுக்கொல்லை பள்ளி வாசலுக்கு வந்தனர். அங்கு தொழுகை முடிந்ததும் வெளியே வந்த அவர்கள், திடீரென வடலூர்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விபத்தை தடுக்க பள்ளி வாசல் மற்றும் புதுநகர் செல்லும் குறுக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரி கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், வேகத்தடை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வடலூர்-விருத்தாசலம் சாலையில் 15 நிமிடங்கள் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.