மேலக்கள்ளங்குளத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கிராமமக்கள் மனு

தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் புதிதாக 60 மணல் குவாரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-02-09 22:00 GMT
விருதுநகர்,

தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் புதிதாக 60 மணல் குவாரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மேலக்கள்ளங்குளம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அக்கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் மணல் குவாரி அமைத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்று கூறி குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மேலக்கள்ளங்குளம் கிராமமக்கள் நேற்று கலெக்டரிடம் மணல் குவாரி திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்