அசல் சொத்து ஆவணங்களை நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ‘டிஸ்க் அஸெட் லீட்’ என்ற நிறுவனம் ரூ.761 கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்து முறைகேடு செய்ததாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2018-02-09 00:03 GMT
சென்னை,

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்காக ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, சொத்துகளின் அசல் ஆவணங்களை வழங்கவேண்டும் என்று அந்த நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு, இந்த சிறப்புக் குழு கடந்த டிசம்பர் மாதம் நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் உமாசங்கர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘இதுதொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி அந்நிறுவனத்தின் சொத்துக்களை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையிலான சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். 

மேலும் செய்திகள்