கடைகள் மற்றும் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்,
கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கெடிலம் ஆற்றின் மேற்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை ஆற்றங்கரையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக புதுப்பாளையம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்இணைப்பை துண்டிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இதனை கண்டித்தும், கால அவகாசம் அளிக்கக்கோரியும் பொதுமக்கள் பாரதி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி போராட்டக்காரர்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கும், ஆற்றில் தண்ணீர் இருக்கும் இடத்துக்கும் இடையே 200 மீட்டர் தூரம் உள்ளது. அதனால் எங்கள் வீடுகளையொட்டி மண்ணைகொட்டி புதிதாக கரை அமைக்கலாம் இல்லையென்றால் மாற்று இடம் கொடுத்து விட்டு வீட்டை இடித்துக்கொள்ளட்டும். படிக்கிற எங்கள் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தர வேண்டும். அதற்குள் எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, பா.ம.க. துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலர் ஆனந்த், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் ஆனந்த், அலமுதங்கவேல் ஆகியோரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் பாரதிசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது பற்றி பா.ம.க. துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன் கூறுகையில், கம்மியம்பேட்டை பாலம் அருகேயும், இம்பீரியல் சாலையையொட்டியும் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை. அந்த கட்டிடங்களுக்கு சேதம் வராதபடி வளைந்தும், நெளிந்தும் கரையை அமைத்து உள்ளனர். ஏனெனில் அவர்களெல்லாம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். ஆனால் புதுப்பாளையத்தில் வசிப்பவர்கள் ஏழைகள் என்பதால் அவர்களின் வீடுகளை அகற்ற துடிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.