மேலாண் இயக்குனரை மாற்றக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்
பாப்ஸ்கோ மேலாண் இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
பாப்ஸ்கோ மேலாண் இயக்குனரான வசந்தகுமார் நிறுவனத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுவதாகவும், தொடர் விடுப்பில் உள்ள அவரை உடனடியாக மாற்ற வேண்டும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும், நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பாப்ஸ்கோ ஊழியர் மற்றும் தொழிலாளர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பணிகளை புறக்கணித்து பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விற்பனையகங்கள் மூடல்
தர்ணாவுக்கு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் வெற்றிசெல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் பாப்ஸ்கோ விற்பனையகங்கள் மூடிக்கிடந்தன. ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.