தண்டவாளத்தை கடக்க முயன்ற மெக்கானிக் ரெயில் மோதி பலி

தஞ்சையில், தண்டவாளத்தை கடக்க முயன்ற மெக்கானிக் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-02-06 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மானம்புச்சாவடி மிஷன் தெருவில் உள்ள சின்னையா பிள்ளை சாலையை சேர்ந்தவர் கதிரேசன். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜெகன்(வய18). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை ஜெகன் வண்டிக்காரத்தெருவில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக ஜெகன் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்ட ஜெகன், சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, ஏட்டு தேன்மொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்