வெள்ளகோவில் அருகே கல்லூரி பஸ்-வேன் மோதல்; 2 பேர் பலி
வெள்ளகோவில் அருகே தனியார் கல்லூரி பஸ்-வேன் மோதிய விபத்தில் வேன் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 4 மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்,
கரூர் மாவட்டம் பரமத்திகாட்டு முன்னூர் அருகே சேரன் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து செல்வதற்காக கல்லூரி பஸ் தினமும் மேற்கண்ட ஊர்களுக்கு வந்து செல்லும்.
இந்த நிலையில் அந்த கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று காலையில் மாணவ-மாணவிகளை ஏற்ற காங்கேயம் வந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அந்த பஸ்சில் ஏறினார்கள். அந்த பஸ் காங்கேயத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஓலப்பாளையம் என்ற இடத்தில் கல்லூரி பஸ் வந்த போது எதிரே தஞ்சையில் இருந்து ஒரு வேன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை தஞ்சை அருகே உள்ள நடார் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 30) என்பவர் ஓட்டினார். இவருடைய இருக்கை அருகே காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ் (22) அமர்ந்து இருந்தார். வேனின் உள்ளே வயலூரை சேர்ந்த மகேந்திரன் (35) அமர்ந்து இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் தனியார் கல்லூரி பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் ஜெயராஜ், வேன் டிரைவரின் இருக்கை அருகே அமர்ந்து இருந்த ராஜேஸ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். வேனின் உள்ளே அமர்ந்து இருந்த மகேந்திரன் காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயராஜ் மற்றும் ராஜேஸ் ஆகிய 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மகேந்திரனை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த ஓலப்பாளையத்தை சேர்ந்த மாணவி தமிழரசி (வயது 20), காங்கேயம் சகாயபுரத்தை சேர்ந்த சந்தியா (20), ஓலப்பாளையம் ராம்நகர் காலனியை சேர்ந்த திவ்யா (19), நொச்சிக்காட்டுபுதூரை சேர்ந்த மஞ்சுளா (18), வெள்ளியங் காட்டுபுதூரை சேர்ந்த உதவி பேராசிரியை கோகிலா நிவேதா (25) ஆகிய 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் 5 பேருக்கும் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.