பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி தொடரும் போராட்டம்
பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி ஒரு சமூகத்தினர் போராடி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள சந்தையூர் இந்திரா காலனியில் தீண்டாமை சுவர் உள்ளதாகவும், இந்த சுவர் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஒரு சமுகத்தினர் கடந்த 29-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வருவாய்த் துறையினரும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியிலேயே முடிந்தது.
சுவரை அகற்றக்கோரி சந்தையூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குடும்பம், குடும்பமாக சென்று அங்கேயே குடியிருந்து உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் அரை நிர்வாண கோலத்தில் நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்லாமல் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், “தீண்டாமை சுவரை இடிக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று 4 மாதங்கள் ஆகின்றன. கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தீண்டாமை சுவரை அகற்றும் வரை ஊருக்குள் செல்ல மாட்டோம் என்று கூறினர்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்ப்புலிகள் ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் குழுவினர் சந்தையூர் கிராமத்திற்கு நேரில் வந்து அங்குள்ள சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இரு சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.