கோவில்பட்டி நகைக்கடை அதிபர் கொலை: மேலும் ஒருவர் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண்
கோவில்பட்டி நகைக்கடை அதிபர் கொலையில் தேடப்பட்டு வந்த மேலும் ஒருவர் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
நெல்லை,

நகைக்கடை அதிபர்
கோவில்பட்டி ராஜீவ்நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவர், அங்குள்ள தெற்கு பஜாரில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 30–ந் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டி கிழவிபட்டியை சேர்ந்த சிவபாண்டி (24), கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த சங்கரநாராயணன் (19) மற்றும் பாரதி நகரை சேர்ந்த 17 சிறுவன் ஆகியோர் கடந்த 2–ந்தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கோவில்பட்டி கெச்சிலாபுரத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் சரண்
நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் சோலைசாமி (45) என்பவரை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் கைது செய்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கயத்தாறு ராஜாபுதுக்குடியை சேர்ந்த சிவபெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (32) என்பவர், நேற்று காலையில் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 4–ல் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் மாலதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக் கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றார்கள்.