முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி திரளானவர்கள் பங்கேற்பு
முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இட்டமொழி,

புனித செபஸ்தியார் ஆலயம்
தமிழகத்தின் சைவ கத்தோலிக்க திருத்தலமாக கருதப்படும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முத்துலாபுரத்தில் உள்ள புனிதணீ செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலை, மாலை ஜெப மாலை, திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடந்தன.
8–ம் திருவிழா அன்று காலை புதுநன்மை, திருப்பலி, மாலை நற்கருணை பவனி நடந்தது. 9–ம் திருநாளன்று நேற்று முன்தினம் மாலை குணமளிக்கும் திருப்பலி, தொடர்ந்து திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் மறையுரை ஆற்றினார்.
தேர்ப்பவனி
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி நள்ளிரவு 12 மணியளவில் நடந்தது. அப்போது செபஸ்தியார், மாதா, அந்தோணியார் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 10–ம் திருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. விழாவில் பங்கு தந்தைகள் பாஸ்கர், அந்தோணியார், நார்பர்ட் தாமஸ், அந்தோணி ஜெகதீசன், செல்வராயர், பீட்டர்பால், அருள் அந்தோணி, அன்புசெல்வன், கிங்ஸ்டன், சகாயராஜ், சகாய ஜஸ்டின், ஹெர்மன்ஸ், ராபின், வின்சென்ட், குழந்தைராஜன், பிரகாஷ், ஆரோக்கியராஜ், விக்டர், மெர்லின், ப்ரீத்குமார், ஜேம்ஸ், செல்வரத்தினம், கலைச்செல்வன், ரெமிஜியுஸ், நெல்சன்ராஜ், ராயப்பன், ரூபன், லாரன்ஸ், ராபின்ஸ்டன்லி, அமலன், ஜாண் பிரிட்டோ, சேகரன், ஜெரால்டு எஸ்.ரவி, ததேயுஸ் ராஜன், நெல்சன் பால்ராஜ், அமலதாஸ், விக்டர் சாலமோன், டென்சில்ராஜா, வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வாணவேடிக்கைகள், அசன விருந்து, விளையாட்டு போட்டிகள், நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
விழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை சி.மணி அந்தோணி, தர்மகர்த்தா டி.எஸ்.மெல்கிஸ், கணக்கர் எஸ்.மரியசீமோன் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.