பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியல்
ராசிபுரத்தில், பருத்தியை குறைந்த விலைக்கு வியாபாரிகள் ஏலம் கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். மைதானத்தில் கடந்த 2 மாதங்களாக பருத்தி ஏலம் திங்கட்கிழமைதோறும் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். இந்த பருத்தி ஏலத்திற்கு வழக்கத்திற்கு மாறாக 5, 6 வியாபாரிகள் மட்டுமே வந்திருந்ததாக கூறப்படுகிறது. பருத்தி ஏலம் தொடங்கியதும் வியாபாரிகள் கடந்த வாரத்தைவிட நேற்று நடந்த ஏலத்தில் 1 கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்த விலைக்கு கேட்டுள்ளனர்.
குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் கேட்டதால் விவசாயிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஏலத்தை புறக்கணித்து மாலை 4.15 மணிக்கு கவுண்டம்பாளையம் அருகேயுள்ள ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் வி.ஐ.பி.நகர் பிரிவு ரோடு இணையும் இடத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர். அவர்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து செலவு அதிகம்
அப்போது விவசாயிகள் கூறியதாவது:- சென்ற வாரம் டி.சி.எச். ரக பருத்தி ஒரு கிலோ ரூ.68 முதல் 76 வரையிலும், ஆர்.சி.எச். ரக பருத்தி ரூ.55 முதல் ரூ.69 வரையிலும் ஏலம் விடப்பட்டது. இன்று (அதாவது நேற்று) நடந்த ஏலத்தில் டி.சி.எச். ரக பருத்தி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரைதான் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோவுக்கு ரூ.20 விலை குறைந்துபோனதால் எங்களுக்கு கட்டுப்படியாகாது. குறைந்த விலைக்கு பருத்தியை விற்றால் எங்களுக்கு நஷ்டம். எனவேதான் இதை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
அங்கு வந்த போலீசார் விவசாயிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஏலம் நடைபெற்றது.