தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் மடப்புரம் சம்பத், விவசாயிகள் சங்க செயலாளர் மாசிலாமணி, ம.தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சீனுவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், திராவிட கழக மாநில மகளிர் அணி செயலாளர் செந்தமிழ்செல்வி, மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகின்றது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.