நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மண்டல தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார்.
பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன துணைத்தலைவர் தங்கராசு, தி.க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் சேகரன், மண்டல தலைவர் அய்யனார், மாவட்ட தலைவர்கள் கவுதமன், சித்தார்த்தன், மாவட்ட செயலாளர்கள் வீரையன், துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பான தமிழக அரசின் 2 சட்ட திருத்த மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.க. பேச்சாளர் அதிரடிஅன்பழகன், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் சொக்காரவி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.