நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க. - கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை என்பதை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-05 22:45 GMT
மலைக்கோட்டை,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை என்பதை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் பூவை.புலிகேசி ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதில் எம்.எல்.ஏக்கள் சவுந்தரபாண்டியன், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, ஸ்டாலின்குமார், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவஹர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் இந்திரஜித், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் அருள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்