ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு 2 காளைகளுடன் வந்ததால் பரபரப்பு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு 2 காளைகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது லால்குடியில் இருந்து கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் 2 ஜல்லிக்கட்டு காளை மாடுகளை தமிழர் வீர விளையாட்டு பேரவை செயலாளர் காத்தான் தலைமையில் சிலர் கொண்டு வந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். காளை மாடுகளை உள்ளே அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது காத்தான் உள்ளிட்டவர்கள் லால்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. கோவில் திருவிழாவையொட்டி நாங்கள் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு 10 முறை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விட்டோம். ஆனால் இதுவரை அனுமதி தரப்படவில்லை. அதனால் தான் ஜல்லிக்கட்டு காளை மாடுகளுடன் மனு கொடுக்க வந்தோம் என்றனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் காளை மாடுகளை வெளியே நிறுத்திவிட்டு முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க செல்லுங்கள் என கூறினார்கள். இதனை தொடர்ந்து பேரவையின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 34-வது வார்டை சேர்ந்த என்.எம்.கே. காலனியில் நுண்ணுரம் செயலாக்க மையம் அமைக்கப்பட்டு இருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற நுண்ணுரம் செயலாக்க மையம் அமைந்துள்ள பகுதிகளில் விசாரித்த போது துர்நாற்றம், கொசு, பூச்சி, வண்டு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
எனவே எதிர்காலத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ இந்த நுண்ணுரம் செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரி என்.எம்.கே. காலனி குடியிருப்போர் நல சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி அருகில் உள்ள பெட்டவாத்தலை பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் தலைமையில் பெண்கள் உள்பட சிலர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் சன்ரைஸ் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பலலட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர். திருநெடுங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை காப்பாற்ற உய்யகொண்டான் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர்திறந்து விட வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
திருச்சி விமான நிலையம் பகுதி வசந்த நகரை சேர்ந்த மணி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் தனக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார். இதுபற்றி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.
ஸ்ரீரங்கம் தாலுகா புங்கனூர் கிராமத்தை தனி வருவாய் கிராம நிர்வாகமாக பிரிக்கவேண்டும், புங்கனூர் குளம் முதல் பிராட்டியூர் கலிங்கி வரை உள்ள வடிகால் வாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், புங்கனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரி த.மா.கா. விவசாய அணி தெற்கு மாவட்ட தலைவர் செல்வம் மனு கொடுத்தார்.
மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள வெங்கங்குடி பள்ளி விடையை சேர்ந்த சிவராஜ் என்பவர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு மாறாக கோவிலில் தேங்காய் உடைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கட்டப்பஞ்சாயத்து செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.