மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து: சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும், எச்.ராஜா பேட்டி
மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் கோவிலில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ பற்றியதால் 7 ஆயிரம் சதுர அடி கோவில் கட்டிடம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தீப்பற்ற தொடங்கிய போது மர்மநபர்கள் சிலர் வேடிக்கை பார்த்து உள்ளனர்.
ஆனால் அவர்கள் தீயை அணைக்க எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே தான் அது விபத்தா? அல்லது சதியா? என்று எண்ணத் தோன்றுகிறது. தீ விபத்து தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவு யாரிடம் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்து கோவில்கள் மிகவும் மோசமாக இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் கோவில்களை சென்று பார்வையிட்டு வருகிறேன். அதில் 38 ஆயிரத்து 675 கோவில்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களை காணவில்லை. எனவே கோவில்களை பாதுகாக்க இந்து கோவில் மீட்பு இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். அறநிலையத்துறை எவ்வளவு மோசமாக நிர்வாகம் செய்து வருகிறது என்பதற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சம்பவமே எடுத்து காட்டாகும்.
மீனாட்சி அம்மன் கோவில் என்பது வழிபாட்டு தலம். அங்கு கடைகள் அமைக்கப்பட்டதே தவறு. கடைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு கொடுத்த பல கோடி ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்பவர் விவரம் வெளியிடப்பட வேண்டும்.
விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் அமைக்கும் உயர் மட்ட கமிட்டியால் செய்யப்படும் விசாரணை மட்டமாக தான் இருக்கும். அது மட்டமான கமிட்டி. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். எந்த கால தாமதமின்றி தீ விபத்து நடந்த பகுதியை புனரமைக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு இணையாக ஒரு ஆன்மிக நிகழ்ச்சியை நாம் நடத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எச்.ராஜா சென்றார். அங்கு போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து குறித்து காவல்துறை நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். தீ விபத்து நடந்த விதம் சந்தேகமாக உள்ளது.
இதை யாரோ வேண்டுமென்றே செய்திருக்கலாம். சி.சி.டி.வி. கேமராவில் 4 பேர் அங்கு இருந்தது பதிவாகி உள்ளது. அதனை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு போலீஸ் கமிஷனர் நல்ல முறையில் விசாரணை நடக்கும் என்று கூறினார் என்று தெரிவித்தார்.